செப்.01க்கு பிறகு போரா? பேச்சுவார்த்தையா?
போர் நிறுத்த உடன்பாட்டை கண்காணிக்க வேண்டிய கண்காணிப்புக் குழு விவகாரம் தற்போது சர்ச்சைக்குரிய விடயமாகிவிட்டது. இதற்கான தீர்வினை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதிக்கு இடையில் சாதகமாக காணாதவிடத்து அதற்குப் பின்னரான சூழல் எவ்வாறு அமையப் போகின்றது என்பது குறித்து சிந்திக்கின்ற போது அதில் பல விடயங்கள் உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் சிங்கள தேசத்தின் அர்த்தமற்ற பிரசாரங்களால் விடுதலைப்புலிகளை தடை செய்ததன் எதிர் விளைவாக இப்போது போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடை செய்திருப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் கண்காணிப்பாளர்களாக செயற்பட முடியாது. அவர்களை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என விடுதலைப்புலிகள் தெரிவித்து விட்டனர்.
இதற்காக வழங்கியிருந்த கால அவகாசத்தைக் கூட விடுதலைப் புலிகள் நெகிழ்வுத் தன்மையுடன் நீடித்து எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை வழங்கியுள்ளனர்.
இக்கால கட்டத்துக்குள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் நீக்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். அது நோர்வே நாட்டவராக இருக்கலாம், அல்லது வேறு நாட்டவராக இருந்தாலும் அந்த நாடு நடுநிலைமை தவறக் கூடாது.
ஆனால், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் சிறிலங்கா அரச கூற்று முரண்பாடாக இருக்கின்றது. கண்காணிப்பாளர்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என சிறிலங்கா அரச தரப்புப் பிரதிநிதிகள் கூறிவருகின்றது.
இந்நிலையில் நோர்வே அனுசரணையாளர்கள் சரியாக சிந்தித்துச் செயற்பட வேண்டும். சிறிலங்கா அரசின் அர்த்தமற்ற பேச்சுக்களுக்கு இரையாகாமல் சரியான நடவடிக்கைகளை முறையாக பேண வேண்டும். இந்த அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் நீக்க ப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவில் புதிய பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டால் மாத்திரம் தீர்வு காணமுடியாது. இன்றுள்ள நெருக்கடி நிலையில் அடுத்த கட்ட பாய்ச்சல் எவ்வாறுள்ளதோ அதனடிப்படையில் தான் யுத்தமோ பேச்சுவார்த்தையோ தீர்மானிக்கப்படும்.
ஏனெனில் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கான முதல் சுற்று பேச்சுக்கள் ஜெனீவாவில் நடைபெற்று அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படாத நிலையில் மோசமானதொரு சூழ்நிலை காணப்படுகின்றது. ஒட்டுக்குழுக்களின் ஆயுதக்களைவு விவகாரத்துக்கு சிறிலங்கா அரசு சரியான தீர்வு காணத் தவறியதன் எதிரொலிதான் இன்று போர் நிறுத்த உடன்படிக்கை மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.
மீளவும் இருதரப்பும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என சர்வதேச சமூகம் விரும்புகின்றது. மீண்டும் இரு தரப்புக்களிடையேயும் யுத்தம் ஒன்று முழுஅளவில் வெடிக்கக் கூடாது எனவும் சர்வதேச நாடுகள் கருதுகின்றன. சர்வதேச நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பி லிருந்து இந்த கருத்துத்தான் வெளிவந்துள்ளன. வருகின்றன.
ஆனால், சிறிலங்கா அரசு போர்ச் சூழலை தீவிரப்படுத்திக் கொண்டு சர்வதேச நாடுகளிடம் பகிரங்கமாக இராணுவ உதவிகளை பெற்றுக் கொள்வதில் தீவிர கரிசனை காட்டி வருகின்றது.
படை அதிகாரிகள் தொடக்கம் அமைச்சர்கள், அதிகாரிகள் என பல மட்டங்களிலும் வெளிநாடுகளுக்குச் சென்று ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தான் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக சர்வதேச மட்டத்திலிருந்து எந்தக் கண்டனமோ அல்லது கருத்துக்களோ வெளிவரவில்லை.
எனவே எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதிக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் நீக்கப்பட்டு புதிய பிரதிநிதிகள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டியது பிரதான விடயம்
அதற்கடுத்ததாக போர் நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக நெகிழ்வுத் தன்மையுடன் சிறிலங்கா அரசு செயற்படுமா? என்பது இரண்டாவது பிரச்சினை. இதற்கு நோர்வே அல்லது சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் நகர்வுகள் என்ன என்பதை பொறுத்தே அடுத்தது போரா? அல்லது பேச்சு வார்த்தையா? என்பதன் தலைவிதி தீர்மானிக்கப்படும்.
நன்றி:மட்டு.ஈழநாதம்